தமிழ் பட நடிகைகளை ஒதுக்கும் இந்தி திரையுலகம்

தமிழ் பட நடிகைகளை ஒதுக்கும் இந்தி திரையுலகம்

தமிழ், தெலுங்கு, மலையாள கதாநாயகிகள் இந்தி படங்களில் நடிப்பதை பெருமையாக கருதுகிறார்கள். அதிக சம்பளம், பெரிய நட்சத்திர அந்தஸ்து, உலகளாவிய வியாபாரம் போன்றவை அவர்களை இந்தி பக்கம் இழுக்கின்றன. ஆனால் அங்கு தலைகாட்டிய நடிகைகள் பலருடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. திறமை இருந்தும் அவர்களால் நிலைக்க முடியாமல் போனது. ஸ்ரீதேவி, ஹேமாமாலினிக்கு பிறகு தென்னிந்திய நடிகைகள் யாரும் இந்தியில் ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்தி ‘கஜினி’யில் நடித்து ஒரு படத்திலேயே உச்சத்துக்கு போய் மற்ற இந்தி நடிகைகளை கதி கலங்க வைத்த அசினுக்கு அதற்கு பிறகு நடித்த படங்கள் கைகொடுக்கவில்லை. சல்மான்கான், அபிஷேக் பச்சன், அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கான் என்று முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தும் அவரால் வளர முடியவில்லை. இதனால் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டே விலகி விட்டார். ரஜினிகாந்துடன் ‘சிவாஜி’யில் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தில் இருந்த ஸ்ரேயாவுக்கு தெலுங்கிலும் கை நிறைய படங்கள் இருந்தன. அவருக்கும்

The post தமிழ் பட நடிகைகளை ஒதுக்கும் இந்தி திரையுலகம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
தமிழ் பட நடிகைகளை ஒதுக்கும் இந்தி திரையுலகம்