தனுஷுக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்?

 தனுஷுக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்?
தனுஷ் தற்போது பிரபுசாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிசட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், தற்போது இப்படத்தின் பிற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் வில்லி வேடத்தில் நடிப்பதற்காக பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்டது. தற்போது, இவரைத் தொடர்ந்து இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க நடிகை லட்சுமிமேனனை படக்குழுவினர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

லட்சுமிமேனன் தற்போது அஜித் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வருகிறார். தனுஷுடன் நடிப்பது குறித்து அவர் இன்னும் பதில் ஏதும் கூறவில்லை.

இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற செப்டம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். அதற்குள், பிரபு சாலமன் இயக்கும் படம் முடிந்துவிடும் என்பதால், அதை முடித்து விட்டு துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என தெரிகிறது.