பூஜ்ஜியத்தை பூஜ்ஜியத்தால் வகுத்தால் என்ன கிடைக்கும்!(Video)

பூஜ்ஜியத்தை பூஜ்ஜியத்தால் வகுத்தால் என்ன கிடைக்கும் என்ற கேள்விக்கு ஆப்பிள் ஐபோன் சாமர்த்தியமான பதில் அளித்து தனது வாடிக்கையாளரை அழவைத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் ’சிரி’ என்ற அப்ளிகேஷனை வடிவமைத்தது.

இதன் மூலம் அறிவுப்பூர்வமாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு சிரி அப்ளிகேஷன் பதிலளிக்கும்.

இந்நிலையில் வேடிக்கைக்காக வாடிக்கையாளர் ஒருவர் இந்த சிரி அப்ளிக்கேஷனிடம் பூஜ்ஜியத்தை பூஜ்ஜியத்தால் வகுத்தால் என்ன கிடைக்கும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு சிரியும் வேடிக்கையாக பதிலளித்து இறுதியில் உங்களுக்கு நன்பர்களே இல்லை என்று கூறியுள்ளாது. இதனால் கேள்வி கேட்ட நபர் அவமானத்தில் சோகத்தில் மூழ்கினார்.

இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் இது ஒரு விளையாட்டாகவே மாற ஐபோன் வைத்திருக்கும் பலரும் சிரியிடம் பூஜ்ஜியத்தை பூஜ்ஜியத்தால் வகுத்தால் என்ன கிடைக்கும் என்று கேட்டு அதனின் வசையை வாங்கி கட்டி கொள்கிறார்கள்.