விஜய்க்கு வில்லனான சத்யராஜ்?

விஜய்க்கு வில்லனான சத்யராஜ்?

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புலி’. இதில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் சுருதிஹாசன் நடித்துள்ளார்கள். சிம்பு தேவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடவுள்ளனர்.

இப்படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். மீனாவின் குழந்தை இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறது.

தற்போது இப்படத்தில் வில்லனாக சத்யராஜ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சத்யராஜ் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து ‘நண்பன்’, ‘தலைவா’ படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ படத்திலும் சத்யராஜ் நடித்துள்ளார். இதன் காரணமாக சத்யராஜ் வில்லன் வேடத்திற்கு தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இது இவர் இசையமைக்கும் 50வது படமாகும்.