தூங்காவனம் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தூங்காவனம் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘பாபநாசம்’ படத்திற்குப் பிறகு கமல் ‘தூங்காவனம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இப்படம் சைக்கோ திரில்லர் கதையாக உருவாக்கியிருக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை செப்டம்பர் 4ம் தேதி வெளியிட இருக்கின்றனர். கமல்-திரிஷா கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.