விக்ரம் பிரபு நடிக்கும் புது படம்

விக்ரம் பிரபு நடிக்கும் புது படம்

‘வெள்ளக்காரதுரை’ படத்தையடுத்து விக்ரம் பிரபு, விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதைத்தவிர, குமரவேலன் இயக்கத்தில் ‘வாகா’ படத்திலும் விக்ரம் பிரபு நடித்து வருகிறார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரன்யா ராவ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தையடுத்து புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

‘ரோமியோ ஜூலியட்’ வெற்றியை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கவுள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்குகிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். மேலும் இப்படத்திற்கு கதாநாயகி மற்றும் அனைத்து நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்வு முடிந்தவுடன் விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.