நடிகர் சங்க தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நடிகர் சங்க தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி முடிவடைந்தது.

இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 5-ந் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் 71 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததாகவும், அவற்றில் 68 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இந்நிலையில் இன்று நடிகர் சங்க தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தலைவர் பதவிக்கு சரத்குமார், நாசர், சிவசாமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். துணை தலைவர் பதவிக்கு கருணாஸ், மோகன்குமார், பொன்வண்ணன், சிம்பு, விஜயகுமார் ஆகியோரும், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, விஷால், சிவசாமி ஆகியோரும், பொருளார் பதவிக்கு கண்ணன், கார்த்தி ஆகியோரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 48 பேர் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.