செசல்ஸின் கலாச்சார தூதரான ஏ.ஆர்.ரஹ்மான்

தனது இன்னிசையால், இரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது, தனது அன்பான நடவடிக்கைகளால் வெளிநாட்டினரையும் கவர்ந்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான செசல்ஸின் கலாச்சார மேம்பாட்டுக்கு உதவிய ஏ.ஆர்.ரஹ்மானை, அந்நாட்டின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சரவை, கலாச்சார தூதராக நியமனம் செய்துள்ளது.

இதற்கான சான்றிதழை தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் ஏ.ஆர். ரஹ்மான் நேற்று வெளியிட்டார். மேலும், இந்த அங்கீகாரத்துக்காக அந்நாட்டு மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதுமட்டுமின்றி, பிரபல இயற்பியலாளர் ஸ்டீவன் ஹாக்கிங்ஸ், வறுமை ஒழிப்பு, சமத்துவமற்ற நிலையை எதிர்த்து போராட, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப செயல்பட உலகெங்கிலும் குளோபல் கோல்ஸ் என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்த உலகெங்கிலும் உள்ள பிரபலமான மனிதர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில், ரஹ்மானும் இடம் பெற்றுள்ளது, நமக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.