பாபி சிம்ஹாவின் மசாலா படம் டீசர் நாளை வெளியீடு

பாபி சிம்ஹா தற்போது ‘மசாலா படம்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இவருடன் மிர்ச்சி சிவா இணைந்து நடித்து வருகிறார். மேலும் புதுமுகம் கௌரவ் மற்றும் ‘நில் கவனி செல்லாதே’ படத்தில் நடித்த லக்ஷ்மி தேவி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் சார்பாக விஜய ராகவேந்திரா தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்து வருகிறார். வேகமாக உருவாகி வரும் இப்படத்தின் டீசரை உழைப்பாளர் தினத்தன்று (நாளை) வெளியிடவுள்ளனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா கூறும்போது, மே 1 உழைப்பாளர் தினத்தன்று எங்கள் மசாலா படத்தின் டீசரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். விரைவில் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *