விக்ரமுடன் மோத தயாரான சிவகார்த்திகேயன்

விக்ரமுடன் மோத தயாரான சிவகார்த்திகேயன்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் பொன்ராமும், சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கும் படம் ‘ரஜினி முருகன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் ராஜ்கிரண், சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து இப்படம் கடந்த மாதம் 17ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் கடன் பிரச்சனையால் இப்படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. தற்போது இப்படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வரும் 21ம் தேதி இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படமும் வெளியாக இருக்கிறது. ஒரே நாளில் இவ்விரு படங்களும் வெளியாவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.