மூச்சு திணறல்: சோ ஆஸ்பத்திரியில் அனுமதி

மூச்சு திணறல்: சோ ஆஸ்பத்திரியில் அனுமதி

துக்ளக் ஆசிரியர் சோ நேற்று இரவு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ‘சோ’ குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.