தடைகளை தாண்டி புலி படம் திரையரங்குகளில் ரிலீசானது

தடைகளை தாண்டி புலி படம் திரையரங்குகளில் ரிலீசானது

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘புலி’ படம் இன்று முதல் வெளியாவதாக இருந்தது. இதற்காக இன்று திரையரங்குகளில் காலை 5 மணி முதலே சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் ‘புலி’ படத்தின் சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது. இன்று இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், ‘புலி’ படம் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் சரியாக 10 மணிக்கு வெளியிடப்பட்டது. ‘புலி’ படம் வெளியாவதற்கு ஏற்பட்ட பிரச்சினை நீங்கியது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. திரையரங்குகளில் ஆரவாரத்துடன் ‘புலி’ படத்தை கண்டுகளித்து வருகின்றனர். ‘புலி’ படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன், இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் சார்பில் பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.