ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

'Theri' (Vijay 59) First Look Poster Released

The first look of ‘Theri’ (Vijay 59).Atlee Kumar Twitter Account

'Theri' First Look

The first look from Vijay’s “Theri”.Atlee Kumar Twitter Account

'Theri' (Vijay 59) First Look Poster Released

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘விஜய் 59’ என்று அழைத்து வந்தார்கள். மேலும் போலீஸ் கதை என்பதால் ‘காக்கி’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் உறுதியாகாத நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அதிகாரப்பூர்வமான தலைப்பை 26ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தனர்.

ஆனால், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக படத்தின் தலைப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்றே வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு ‘தெறி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

தற்போது சமூக வலைதளத்தில் ‘தெறி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேகமாக பரவி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார்.