பாபநாசம் திருட்டு டி.வி.டி. தயாரித்து விற்றவர் கைது

பாபநாசம் திருட்டு டி.வி.டி. தயாரித்து விற்றவர் கைது

சென்னைக்குட்பட்ட பகுதியில் வார இறுதி நாட்களின் நள்ளிரவு வேளையில் மிதமிஞ்சிய போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் தலைமறைவு கிரிமனல் குற்றவாளிகளை பிடித்து தண்டிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படை போலீசாரிடம் நேற்றிரவு போதையில் வாகனம் ஓட்டிவந்த 106 பேர் பிடிபட்டனர். சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 707 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’, ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ உள்ளிட்ட புதிய படங்களின் டி.வி.டி.களை கள்ளத்தனமாக தயாரித்து விற்பனை செய்துவந்த தவ்லத் பாஷா என்பவரையும் திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆபாசப் படங்கள் உள்பட ஏராளமான திருட்டு டி.வி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.