டுவிட்டரில் இணைந்த கவுதமி

டுவிட்டரில் இணைந்த கவுதமி

1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது கமலுடன் இணைந்து ‘பாபநாசம்’ படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கவுதமி நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டு வருகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில் தோன்றியிருந்தாலும் தன்னுடைய திறமையான நடிப்பால் மீண்டும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

ரசிகர்களுடன் தன்னுடைய படத்தின் அனுபவங்களையும், சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்வதற்காக சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்திருக்கிறார் கவுதமி. இதில் இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க இருக்கிறார்.