பாபநாசம் படத்துடன் இணைந்த கோ 2

பாபநாசம் படத்துடன் இணைந்த கோ 2

கமல் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள படம் ‘பாபநாசம்’. இதில் கமலுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு கவுதமி நடித்துள்ளார். மேலும் நிவேதா தாமஸ், எஸ்தர் ஆகியோர் கமலுக்கு பிள்ளைகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப்பே இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். மலையாளத்தில் வெற்றி பெற்றதைவிட தமிழில் அதிக வரவேற்பினை பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.

இப்படம் நாளை முதல் உலகெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்தின் இடைவெளியில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் நடித்துள்ள ‘கோ 2’ படத்தின் மோஷன் போஸ்டரை ஒளிபரப்பவுள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.