புகை பிடிக்கும், குடிக்கும் காட்சிகள் இல்லாமல் உருவாகும் ஜெயம் ரவியின் மிருதன்

புகை பிடிக்கும், குடிக்கும் காட்சிகள் இல்லாமல் உருவாகும் ஜெயம் ரவியின் மிருதன்

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘தனி ஒருவன்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ‘நாய்கள் ஜாக்கிரதை’ பட இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் ‘மிருதன்’ என்கிற படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை குளோபல் இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி 30 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இந்த மாதம் 18-ந் தேதி சென்னையில் தொடங்கி அடுத்தகட்டமாக ஐதராபாத்தில் நடைபெற்று, அக்டோபர் மாத இறுதியில் முழு படப்பிடிப்பும் முடியவுள்ளது.

இப்படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் புகை பிடிப்பது போலவோ, மது குடிப்பது போலவோ எந்தவொரு காட்சியும் இடம்பெறவில்லை என்பதுதான். மேலும், இப்படத்தின் பாடல் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. டி.இமான் சமீபத்தில் இப்படத்திற்காக இரண்டு பாடல்களை பதிவு செய்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.