தமிழில் வெளிவரும் மகேஷ்பாபுவின் மற்றொரு படம்

தமிழில் வெளிவரும் மகேஷ்பாபுவின் மற்றொரு படம்

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் நடித்த பல படங்கள் ஆந்திராவில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவருக்கு தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் நடித்த பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீசாகி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘செல்வந்தன்’ படம் தமிழில் வெளியாகவுள்ளது.இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், எம்.பி.எண்டர்டைன்மென்ட்ஸ் லிமிடெட் வழங்க பத்ரகாளி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இப்படம் தெலுங்கில் ‘ஸ்ரீ மந்த்துடு’ என்ற பெயரில் மிக பிரமாண்டமான முறையில் சுமார் 70 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தின் வெளியிட்டை ஒட்டி இந்த படத்தின் வெளியிட்டை மகேஷ்பாபுவே ஒத்திவைத்து ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் வெளியிட உள்ளனர்.

மதி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கொரட்டாலா சிவா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்திற்கு வசனம் எழுதி ராஜராஜா தமிழாக்கம் செய்திருக்கிறார். இவர் 200க்கும் மேற்பட்ட படங்களை தமிழாக்கம் செய்திருக்கிறார்.

இந்த படத்தில் நாயகன் மகேஷ் பாபு உபயோக படுத்தும் ஒரு சைக்கிள் 3.75 லட்சம் செலவில் வெளிநாட்டில் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டது.