குழந்தைகள் முன் பெற்றோர்கள் முத்தமிடலாமா?

முத்தம் என்பது அன்பை பரிமாற சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆனால் குழந்தைகள் முன்னால் முத்தமிடுவது சரியா? பெற்றோர்களால் வரம்போடு நடக்க முடியுமெனில் குழந்தைகள் முன்னால் முத்தமிடுவதில் தவறில்லை.

முத்தமிடுவது என்பது அன்பை பரிமாறும் ஒரு வழி என்ற அடிப்படை பாடத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனால் தங்கள் பெற்றோர், ஒருவருக்கொருவர் எந்தளவிற்கு பாசமும் அன்பும் கொண்டுள்ளனர் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள். உங்கள் குழந்தைகள் முன் நீங்கள் ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொள்கையில், அவர்கள் உங்களையே உற்று பார்க்கையில், அவர்களையும் முத்தமிட்டு, அவர்களை விரும்புவதைக் கூற மறந்து விடாதீர்கள். இப்படி செய்வதால் அப்பா அம்மாவையும் விரும்புவதால் தான் முத்தமிடுகிறார் என அவர்களுக்கு புரியும்.

ஆரோக்கியமான உறவுமுறை பற்றி குழந்தைகள் கற்றுக்கொள்ள சிறந்த இடமாக விளங்குவது வீடு தான். பெற்றோர் உதட்டோடு உதடு, எளிமையான மற்றும் சுருக்கமான முத்தத்தை பகிர்ந்தால், அது குழந்தைகள் மத்தியில் அன்பை எடுத்துக்காட்டும் வகையில் அமையும். ஆனால் அவர்கள் முன்னிலையில் உங்கள் உதடுகள் தொடாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். மேலும் குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் அடிக்கடி முத்தமிட்டே கொண்டிருப்பதும் கூட அவர்கள் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதனால் குழந்தைகள் முன்னால் மிகவும் ஆழமான மற்றும் பேரார்வம் கொண்ட முத்தங்களைப் பெற்றோர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அதனால் எளிய முத்தங்கள் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. குழந்தைகள் முன்னால் பெற்றோர்கள் முத்தமிடாமல் இருக்க பல்வேறு காரணங்கள் உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் ஏன் முத்தமிடக் கூடாது என்பதை இந்த கட்டுரை உங்களுக்கு புரிய வைக்கும்.

அந்தரங்கத்தை இழத்தல்

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் தெய்வீகமானது. ஒரு தம்பதியாக நீங்கள் இருவரும் அந்தரங்கமாக அதிக நேரம் செலவிட வேண்டும். குழந்தைகள் முன்னிலையில் ஒருவரை ஒருவர் தன்னிச்சையாக முத்தமிட்டாலோ அல்லது கட்டிப்பிடித்தாலோ, உங்கள் அந்தரங்கத்தை இழக்கும் உணர்வை நீங்கள் பெறுவீர்கள். குழந்தைகள் முன்னால் பெற்றோர்கள் முத்தமிடாமல் இருப்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
18-1447842051-1-couple
பாலியல்
ஒருவரை ஒருவர் முத்தமிடும் தருணத்தில், சில நேரங்களில் பெற்றோர்கள் தங்களது வரம்பை மறந்து சில பாலியல் ரீதியான செயல்களில் இறங்கி விடுவார்கள். அவர்களை தங்கள் குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் மொத்தமாக மறந்து போவார்கள். இதனால் இதை பார்க்கும் குழந்தைகள் அதனை போல் தங்களுக்குள் செய்து பார்க்க முயற்சிக்கக்கூடும். அதனால் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன்னால் முத்தமிட கூடாது. ஆம், இன்றைய காலத்தில், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான கல்வி அவசியமான ஒன்று தான்.

18-1447842058-2-parents
எல்லையை தாண்டுதல்
தங்கள் பெற்றோர் ஒருவரை ஒருவர் அடிக்கடி முத்தமிட்டு கொள்வதை தங்கள் குழந்தைகள் பார்க்கும் போது, யாரை வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் முத்தமிட்டு கொள்ளலாம், அதில் எந்த ஒரு தவறும் இல்லை என கற்பனை செய்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தங்கள் எல்லையை தாண்டி விடுவார்கள். குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் முத்தமிட்டு கொள்ளமால் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

18-1447842065-3-kissing-parentsd
அன்பைப் பரிமாறும் வேறு விதம்
கணவன் மனைவிக்கு இடையே அன்பை பரிமாறிக் கொள்ள முத்தம் மட்டுமே ஒரே வழி என நினைத்து விடாதீர்கள். சாதாரணமாக உரையாடி கொண்டிருக்கும் போது ஒருவரின் கைகளை மற்றவர் பற்றிக் கொள்வதும் கூட அன்பை பரிமாறிக் கொள்வதற்கான எளிய வழியாகும். உங்கள் குழந்தைகள் பார்த்தாலும் கூட, உங்கள் துணையின் கைகளை நீண்ட நேரம் கூட பற்றிக் கொள்ளலாம். ஆனால் முத்த விஷயத்தில் அப்படியில்லை. அதனால் தான் குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் முத்தமிடக்கூடாது என கூறுகிறோம்.

18-1447842072-4-couplekiss3
குறிப்பு
அதே போல், தன் கணவன் மீதுள்ள அன்பை வெளிக்காட்ட, குழந்தைகள் முன்னிலையில் முத்தமிடுவதற்கு பதிலாக, தன் கணவனுக்கு பிடித்த உணவை சமைத்து பரிமாறலாம். மீண்டும் கூறுகிறோம், குழந்தைகள் கற்றுக்கொள்ள சிறந்த பள்ளியாக இருப்பது அவர்களின் வீடே. அதனால் தங்களின் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருந்து, குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது பெற்றோரின் முக்கியமான கடமையாகும்

18-1447842081-5-parents-with-girl-child