திருமணத்தின் போது பெண் சுதந்திரம் பறிக்கப்படுகிறதா?

பெண்­ணா­னவள் பொத்திப் பொத்திப் பத்­தி­ர­மாக, பாது­காப்­பாக வளர்க்­கப்­ப­டு­கிறாள். ஆண் தன்­னிச்­சை­யாக வளர்க்­கப்­ப­டு­கிறான்.

பெண் என்­பவள் மற்­றவர் பேச்சைக் கேட்டு அடங்கி நடக்க வேண்­டி­யவள் என்றும், எதிர்த்துப் பேசு­கிற உரிமை ஆணுக்கு மட்­டுமே உண்டு என்றும் பழக்­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள்.

பிரச்­சினை வந்தால் அழு­வது பெண்ணின் இலக்­க­ண­மா­கவும், எதிர்த்து நிற்­பது ஆணின் அடை­யா­ள­மா­கவும் சொல்­லப்­பட்டு வளர்க்­கி­றார்கள்.

மீறு­கிற பெண்ணைத் தூற்றும் இந்தச் சமு­தாயம் ஒரு பெண்ணின் வாழ்க்கை திரு­மணம் என்­கிற பெயரில் ஆணுடன் இணை­கிற போதுதான் அவ­ளது வாழ்க்கை பூர­ண­ம­டை­கி­றதாம்.

அதுவே திரு­ம­ண­மா­காத எந்த ஆணும் இப்­படி யொரு கேள்­வியை எதிர்­கொள்­வ­தில்லை., சமைப்­பது, சாப்­பி­டு­வது என எல்­லா­வற்­றுக்கும் கண­வரின் அனு­ம­தியும், அங்­கீ­கா­ரமும் கேட்டே பழக்­கப்­ப­டு­கிறாள் பெண்.

உட­லியல் ரீதி­யா­கவும் ஆணுக்கும் பெண்­ணுக்கும் நிறைய வித்­தி­யா­சங்கள் இருக்­கின்­றன.  ஆண்கள் அழு­வ­தில்லை. தனது பல­வீ­னங்­களைப் பகி­ரங்­க­மா­கவோ, மனை­வி­யிடம் மனம் விட்டோ பேசு­வ­தில்லை.

தாம்­பத்­திய உறவு கொள்ள கண­வ­னுக்கு மன­த­ள­வி­லான தயா­ரிப்­புகள் ஏதும் அவ­சி­யப்­ப­டு­வ­தில்லை.

நினைத்த நேரத்தில் அதை  சாதித்துக் கொள்­ளலாம். பெண்­ணுக்கோ அவள் உடலில் உள்ள நியூ­ரான்­களும் ஹார்­மோன்­களும் இதற்கு நேர்­மா­றாக சிந்­திக்க வைப்­பவை. அவ­ளுக்­கான எல்­லை­களைத் தீர்­மா­னிப்­பது வரை அவற்றின் ஆதிக்கம் இருக்­கி­றது.

தன் காதலர் அல்­லது கண­வரின் விருப்­பத்தை நிறை­வேற்­றா­விட்டால், அவர் தன்னை விட்டு விலகி விடுவார் என்­கிற பாது­காப்­பின்மை பல பெண்­க­ளுக்கும் இருக்­கி­றது.ஒரு உறவில் இப்­ப­டிப்­பட்ட விஷ­யங்­களை சந்­திக்­காமல் தப்­பிக்­கிற பெண்­களும், இரண்­டா­வது காதல் அல்­லது திரு­ம­ணத்தில் கட்­டாயம் மாட்டிக் கொள்­கி­றார்கள்.

பேர­ழகும், பெரிய அந்­தஸ்தும், பெயரும், புகழும் உள்ள பெண்­களும், காதலில் சுல­ப­மாகக் கரைந்து விடு­கி­றார்கள். அதிலும் தன்­னை­விட அந்­தஸ்தில் உயர்ந்த ஒரு­வரைத் திரு­மணம் செய்­கிற போது, இந்தக் கரை­தலும் காணாமல் போதலும் மிக இயல்பாகவே நடந்து விடுகிறது.

பெண்கள், திருமணத்துக்குப்பிறகும், திருமணத்துக்கு முன்பான சந்தோஷத்தைத் தொலைக்காமல் வாழ்ந்தால்தான் அந்த வாழ்க்கை உயிர்ப்போடு இருக்கும்.