விஷால்-பாண்டிராஜ் இணைந்து ஆடும் கதகளி

விஷால்-பாண்டிராஜ் இணைந்து ஆடும் கதகளி

‘பாயும் புலி’ படத்திற்கு பிறகு விஷால், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு தலைப்பு தேர்வு செய்யாமலேயே படப்பிடிப்பு நடத்தி வந்த படக்குழுவினர் தற்போது இந்த படத்திற்கு ‘கதகளி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் விஷாலுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்ரீன் தெரசா நடிக்கிறார். சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘ஆம்பள’ படத்திற்கு பிறகு இந்த படத்தின் மூலம் ஹிப் ஹாப் தமிழா ஆதி மீண்டும் விஷாலுடன் இணைந்துள்ளார். இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

விஷால், நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்தாலும், ஒருபக்கம் பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்திலும் நடித்துக் கொண்டுதான் வருகிறார். இப்படத்தை இந்த வருடத்தின் இறுதியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.