கரகாட்டக்கரன் படம் ரீமேக்கில் நடிக்க ஆசை: லட்சுமிமேனன்

கரகாட்டக்கரன் படம் ரீமேக்கில் நடிக்க ஆசை: லட்சுமிமேனன்

பழைய ஹிட் படங்களை ரீமேக் செய்து நடிக்க நடிகர், நடிகைகள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே ஜெமினி கணேசனின் ‘நான் அவனில்லை’ படம் ஜீவன் நடிக்க ரீமேக் ஆனது. இப்படம் வெற்றிகரமாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகமும் வந்தது.

ரஜினியின் தில்லுமுல்லு படம் சிவா நடிக்க ரீமேக் செய்யப்பட்டு வசூலை குவித்தது. முரட்டுக்காளை படமும் ரீமேக் ஆனது. கமலின் சிவப்பு ரோஜாக்கள், விஜயகாந்த், மோகன் நடித்த நூறாவது நாள் படங்களும் ரீமேக் ஆக உள்ளன. ரஜினியின் பாட்ஷா படமும் ரீமேக் ஆக உள்ளது. இதில் அஜித் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி உள்ளன.

இதையடுத்து ராமராஜன்–கனகா நடிப்பில் வெளியாகி தமிழகமெங்கும் வசூல் சாதனை நிகழ்த்திய கரகாட்டக்காரன் படத்தையும் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. கரகாட்டக்காரத்தை மையமாக வைத்து காதல் படமாக இப்படம் வந்தது. கரகாட்டக்காரன் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படுவதாக லட்சுமிமேனன் கூறினார்.