கபாலி, பாட்ஷாவை மிஞ்சுமா?: ரஜினி விளக்கம்

கபாலி, பாட்ஷாவை மிஞ்சுமா?: ரஜினி விளக்கம்

திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் அமைச்சரும் ஆர்.எம்.வீரப்பனின் 90-வது பிறந்தநாள் விழா நேற்று சென்னை ராணி சீதை அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துகொண்டார்.

பின்னர் அவர் விழாவில் பேசும்போது, நான் நடித்த ‘பாட்ஷா’ படத்தை ஆர்.எம்.வீரப்பன்தான் தயாரித்திருந்தார். அந்த படத்தின் 125-வது நாள் விழாவில் நான் கலந்துகொண்டு, மேடையில் வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி பேசினேன்.

அன்று இரவே அவருடைய அமைச்சர் பதவி போய்விட்டது. அடுத்த நாள் இந்த விஷயம் கேள்விப்பட்டு, கொஞ்சம் பயத்தோடு அவருக்கு போன் செய்து, என்னுடைய வருத்தத்தை தெரிவித்தேன். அவர் சிரித்துக்கொண்டே, இது காலத்தின் கட்டாயம் என்று கூறினார்.

என்னிடம் பலரும் இப்போது நான் நடிக்கிற கபாலி படம் பாட்ஷாவை மிஞ்சுமா? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். பாட்ஷாவை மிஞ்சும் அளவுக்கு இன்னொரு படம் வருமான்னு தெரியல. எப்பவுமே ஒரேயொரு பாட்ஷாதான் என்று பேசினார்.

மேலும், அவர் பேசும்போது, ஆர்.எம்.வீரப்பன் ஒருமுறைகூட மருத்துவமனை போனதே இல்லைன்னு சொல்வார்கள். மருத்துவமனைக்கு சென்று திரும்பிய வேதனையை அனுபவித்தவன் நான். தயவு செய்து யாரும் மருத்துவமனைக்கு போகாத அளவுக்கு உடம்பை வைத்துக் கொள்ளங்கள். குறிப்பாக, 50 வயசுக்கு மேல் உள்ளவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்து கொள்ளுங்கள் என்று பேசினார்.

இந்த விழாவில் பழம்பெறும் இயக்குனர் எஸ்.பி.முத்தராமன், தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.