அர்னால்டு படத்தை தமிழகத்தில் வெளியிடும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்

அர்னால்டு படத்தை தமிழகத்தில் வெளியிடும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்

ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அர்னால்டு  நடிப்பில் வெளிவந்துள்ள டெர்மினேட்டர் படங்கள் உலகம் முழுவதும் பிரபலம். அந்த வரிசையில் தற்போது அர்னால்டு நடிப்பில் ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ என்ற படம் உருவாகியுள்ளது. இப்படம் இந்தியாவில் வருகிற ஜூலை 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தை தென்னிந்தியா முழுவதும் ஆரா சினிமாஸ் நிறுவனம் சார்பாக மகேஷ் கோவிந்தராஜ் வெளியிடுகிறார். இவரிடமிருந்து தற்போது தமிழகத்தின் விநியோகஸ்த உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர் நிறுவனம் வாங்கியுள்ளது.

இதுகுறித்து எஸ்கேப் ஆர்டிஸ் நிறுவனத்தின் சார்பில் மதன் கூறும்போது, ஹாலிவுட் படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அர்னால்டின் ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ படத்தை தமிழகத்தில் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது என்று கூறினார்.