டோனி வாழ்க்கை வரலாறு படம்: மனைவி வேடத்தில் கியரா அத்வானி நடிக்கிறார்

டோனி  வாழ்க்கை வரலாறு படம்: மனைவி வேடத்தில் கியரா அத்வானி நடிக்கிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி. இரண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்த அவரது வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. ‘தி அன்டோல்டு ஸ்டோரி’ என்ற பெயரில் இந்தியில் தயாராகும் இந்த படத்தை நீரஜ் பாண்டே இயக்கி வருகிறார்.

டோனியின் நண்பரின் நிறுவனமான ரித்தி ஸ்போர்ட்ஸ் உள்பட 3 நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்கிறது. டோனியின் கதாபாத்திரத்தில் சுதாந்த்சிங் ராஜ்புத் நடித்து வருகிறார். ஜான் ஆப்ரகாம் (யுவராஜ்சிங் கதாபாத்திரம்), பவாத் கான் (வீராட் கோலி வேடம்) உள்பட முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்து வருகிறார்கள்.

டோனியின் மனைவி ஷாக்சி வேடத்தில் பர்னீதி சோப்ரா நடிப்பதாக இருந்தது. அவர் அதில் இருந்து விலகியதால் வேறு ஒருவரை இயக்குனர் நீரஜ்பாண்டே தேடி வந்தார். இந்த நிலையில் புதுமுக நடிகையான கியரா அத்வானி ஷாக்சி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அகமதாபாத்தை சேர்ந்த இவர் கடந்த ஆண்டுதான் பாலிவுட்டில் அறிமுகமானார். டோனியின் வாழ்க்கை வரலாறு படம் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு வெளியாகும்.