புகை பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் படம் எடுத்தால் கலைஞர்கள் படைப்பாற்றல் பாதிக்கப்படும்: ஆர்யா

புகை பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் படம் எடுத்தால் கலைஞர்கள் படைப்பாற்றல் பாதிக்கப்படும்: ஆர்யா

நடிகர் ஆர்யா இன்று சேலம் சென்றார். அப்போது ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ரசிகர்கள் முன்பு வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க டிரைலரை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

என்னுடைய 25வது படமான வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தை எனது சொந்த தயாரிப்பில் வெளியிட விரும்பினேன். எனவே இந்த படத்தை தயாரித்துள்ளேன். இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இந்த படத்தின் டிரைலரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற அவர்கள் முன்பாகவே தியேட்டரில் வெளியிட விரும்பினேன். இந்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் போல் முழுநீள நகைச்சுவை படமாக இருக்கும். இந்த படத்தை டைரக்டர் ராஜேஷ் இயக்கியுள்ளார். திருட்டு வி.சி.டி.யினால் தமிழ் சினிமாவுக்கும் பெரிய இழப்பு ஏற்படுகிறது.

நடிகர் சங்கர் தேர்தல் குறித்து கேட்டபோது,

இவ்வளவு நாள் சீனியர்களான பெரிய நடிகர்கள் இந்த சங்கத்தை நடத்தி வந்தார்கள். இதற்கு பிறகு ஜூனியர்களான நாங்கள் இந்த சங்கத்தை நல்ல முறையில் நடத்துவோம் என்ற முறையில் இந்த சங்க தேர்தலில் போட்டியிட உள்ளோம்.

மது ஒழிப்பு குறித்து கேட்டபோது, படத்தை பார்த்து இளைஞர்கள் மது அருந்துவது மற்றும் புகை பிடிப்பது என்பது தவறு. ஏனென்றால் படத்தில் கொலை காட்சி இடம் பெறுகிறது அதுபோல் யாரும் செய்வதில்லை.

புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போல் காட்சி இல்லாமல் படம் எடுத்தால் கலைஞர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படும்.

இவ்வாறு நடிகர் ஆர்யா பேட்டியளித்தார்.