எந்திரன்-2 படத்தில் எமி ஜாக்சன்

எந்திரன்-2 படத்தில் எமி ஜாக்சன்?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்து ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘எந்திரன்’. ரஜினி, ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதுமட்டுமில்லாமல், வசூலிலும் பெரிய சாதனைகளை புரிந்தது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் மீண்டும் ரஜினியே நடிக்கவுள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விக்ரம் பெயர் பரீசிலிக்கப்பட்டது. பின்னர், பாலிவுட் நடிகரான அமீர்கானும் பரிசீலிக்கப்பட்டார். தற்போது, ஹாலிவுட் நடிகர் அர்னால்டை இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ‘ஐ’ படத்தில் எமிஜாக்சன் தனது அபார நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதனால், இந்த படத்திலும் அவரையே ஷங்கர் கதாநாயகியாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.