அஜித் படத்தின் டீசர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அஜித் படத்தின் டீசர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா – அஜித் கூட்டணியில் வெளியான ‘வீரம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் இப்படம் மூலம் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார். மேலும் தங்கையாக லட்சுமி மேனனும், வில்லனாக கபீர் சிங்கும், காமெடியனாக சூரியும் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் நடந்து வருகிறது. அங்கு அஜித்-சுருதி ஹாசன் சம்மந்தப்பட்ட பாடல் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படத்தை தீபாவளி அன்று வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக இப்படத்தின் டீசரை அக்டோபர் மாதம் 1ம் தேதியிலும், பாடல்களை அக்டோபர் மாதம் இறுதியிலும் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.