ரோமியோ ஜூலியட் படக்குழுவினரிடம் 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்கும் டி.ஆர் |Romeo and Juliet, prompting the crew to 1 crore compensation TR

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ரோமியோ ஜூலியட்’. லஷ்மண் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இமான் இசையில் அனிருத் பாடிய டண்டணக்கா பாடல் தமிழகமெங்கும் சூப்பர் ஹிட் ஆனது.

‘டண்டணக்கா’ என்பது டி.ராஜேந்தர் படங்களில் சொல்லும் பிரபலமான வசனம். இந்தப் பாடல் டி.ராஜேந்தரை இழிவுபடுத்துவதுபோல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் படக்குழுவினர் டி.ராஜேந்தரை இழிவுபடுத்தவில்லை என்று மறுத்தார்கள்.

இதனை ஏற்காத டி.ராஜேந்தர் இப்படக்குழுவினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இது சம்மந்தமாக இப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், இசையமைப்பாளர் டி.இமான், பாடகர் அனிருத், பாடலாசிரியர் ரோகேஷ் ஆகிய நான்கு பேருக்கும் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து டி.ராஜேந்தரின் வக்கீல் நோட்டிஸில் கூறியிருப்பதாவது, ரோமியோ ஜூலியட் படத்தில் இடம்பெறும் டண்டணக்கா பாடலை எனது கட்சிக்காரரிடமிருந்து முறையான அனுமதி இல்லாமலும் அவர் பேசும் வசனத்தை, பின்னணியில் ஒலிக்க செய்திருக்கிறார்கள்.

இதன் மூலம் என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். இந்த பாட்டு, பதிவு செய்யப்படும் காட்சிகள் யூடியூப்பிலும், சாட்டிலைட் சானலிலும் வெளியிடப்பட்டது.

இதற்காக எனது கட்சிக்காரருக்கு ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும். மேலும் யூடியூப், தனியார் சாட்டிலைட் சானல் உள்பட எந்த ஒரு ஊடகத்திலும் எந்த தளத்திலும் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும். அதோடு வழக்கு செலவினங்களுக்காக ரூபாய் 1000 தரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *