தனுஷுடன் இணைந்து நடிக்கும் |Radhika starring Dhanush

‘வேலையில்லா பட்டதாரி’ கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய படத்தில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் சமந்தா நடித்து வருகிறார்கள். வேல்ராஜ் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதில் தனுஷ் பள்ளி மாணவனாக நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கிய காட்சிகளை சில தினங்களுக்கு முன்பு தனுஷ் படித்த பள்ளியிலேயே படமாக்கியுள்ளனர். தற்போது இந்த கூட்டணியில் ராதிகாவும் இணைந்துள்ளார்.

இதுகுறித்து ராதிகா கூறும்போது, நான் தற்போது தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி கூட்டணியில் இணைந்து நடித்து வருகிறேன். மிகவும் அற்புதமான திறமை கொண்ட தனுஷுடன் இணைந்து நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

ராதிகா தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘நானும் ரௌடிதான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய்-அட்லி இணையும் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *