விஷாலுக்கு வில்லனாக மாறிய ஆர்.கே.சுரேஷ்

விஷாலுக்கு வில்லனாக மாறிய ஆர்.கே.சுரேஷ்

‘பாயும் புலி’ படத்திற்குப் பிறகு விஷால் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கதகளி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க விஷால் தனது சொந்த நிறுவனம் சார்பாக தயாரித்து வருகிறார்.

இப்படத்தையடுத்து ‘கொம்பன்’ படத்தை இயக்கிய முத்தையாவின் இயக்கத்தில் ‘மருது’ என்னும் படத்தில் விஷால் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தப்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதில் வில்லனாக நடிக்க ஆர்.கே.சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்ககவலை இவரே உறுதி செய்துள்ளார். இவர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.