காதல் பிரிவுக்கு இந்த தலைமுறையினர் வைத்திருக்கும் கிறுக்குத்தனமான காரணங்கள்!

பணத்தை பார்த்து தான் காதலிக்கிறார்கள் என்று இந்த தலைமுறையினரை யாரும் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் இவர்கள் அவ்வளவு எல்லாம் யோசிப்பதே கிடையாது. “வேணும்” என்ற ஒற்றை வார்த்தையை பின்னணியாக கொண்டு தான் இங்கு காதல் என்ற பெயரில் பல உறவுகள் மலர்கின்றன.

பார்த்ததும் காதல் என்றால் கூட பரவாயில்லை. ஃபேஸ் புக்கில் பார்த்ததற்கு எல்லாம் காதலிப்பது தான் “கடுப்பேற்றுகிறது மை லார்ட்” என்பது போல இருக்கிறது. இந்த காலத்து இளைஞர்கள், இளம் பெண்கள் ஏமாறுகிறார்கள் என்பதை விட, தங்களை ஏமாற்றிக் கொள்ள, பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கின்றனர் என்பது தான் உண்மை.

பிரிந்துவிடலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொண்டு தான் இங்கு பலர் இணைகிறார்கள். இதற்கு இவர்கள் கூறும் கிறுக்குத்தனமான காரணங்கள் தான் தலைசுற்ற வைக்கிறது.

பணத்துக்காக காதலிக்கிறா மச்சான்
காதலிக்கும் வரை கூட பணம் என்பது தேவையில்லை தான். ஆனால், திருமணம் செய்துக் கொள்ளவே பணம் நிறைய தேவைப்படும். வேலைக்கு போக வற்புறுத்தினால் கூட பணத்திற்காக தான் காதலித்தாள் என்று கூறி சண்டையிட்டு உறவை உடைத்து விடுகின்றனர்.
15-1442302310-1freakyreasonsbehindthisgenerationsbreak-up

ஃபேஷன் இன்றைய இளம் ஆண், பெண்கள்
அழகை விட தனது துணை ஃபேஷனாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். இப்போது காதலிக்கும் பெண்ணைவிட வேறொரு பெண் ஃபேஷனாக தெரிந்தால் மனம் அலைபாய தொடங்கிவிடுகிறது. முகம் பல்லி போல இருந்தால் கூட பரவாயில்லையாம், ஃபேஷனில் கில்லியாக இருக்க வேண்டுமாம். (வெளங்கிடும்….. மக்களே!!!)
15-1442302316-2freakyreasonsbehindthisgenerationsbreak-up

உறவுக் கொள்ளும் வரைக்கு மட்டுமே
இன்றைய தலைமுறையை எண்ணி மிகவும் மனம் நோகும் விஷயம் என்னவெனில், “கற்பு” தான். ஆண், பெண் இருபாலினரிடமும் இதன் மதிப்பு குறைந்து வருகிறது என்பதைவிட, மறைந்து வருகிறது என்று தான் கூற வேண்டும். இவர்கள் மனதால் சேரத் துடிப்பதே, உடலால் சேர்வதற்காக தான். (எல்லாருமே இப்படி இல்ல… ஆனா, நிறைய பேர் இப்படி தான் இருக்காங்க!!!)
15-1442302322-3freakyreasonsbehindthisgenerationsbreak-up

சுதந்திரம்
சுதந்திரம் என்பது ஊர்சுற்றுவது மட்டும் அல்ல. ஓர் ஆண் காவலனாக இருப்பது, சுதந்திரத்தை பறிப்பது போன்று எடுத்துக் கொள்வது தவறு. எங்கு சென்றாலும் உடன் வருகிறான், எனது சுதந்திரத்தை பறிக்கிறான் என்பதெல்லாம் முட்டாள் தனம். இதில் ஆண்கள் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், ஓர் ஆணிடம் இருந்து பெண்ணை காக்க, ஓர் ஆண் போராடுகிறான் என்பது தான்.
15-1442302328-4freakyreasonsbehindthisgenerationsbreak-up

ஊதிய உயர்வு
காதலிப்பவர்களில் இருவரும் வேலைக்கு செல்லும் பட்சத்தில், தன்னை விட அவன் குறைந்த சம்பளம் தான் வாங்குகிறான் அவனை எப்படி காதலிப்பது என்று கூறுவது சரியானது அல்ல. வேலைக்கு செல்லவில்லை என்றால் அது அவன் குற்றம், அளவுக்கு அதிகமாய் அவன் சம்பாதிக்க வேண்டும் எண்ணம்.
15-1442302334-5freakyreasonsbehindthisgenerationsbreak-up

ஜாதியும், ஜாதகமும்
பார்க்கும் வரை, பழகும் வரை தெரியாத ஜாதியும், ஜாதகமும், திருமணம் என்ற பேச்சுவார்த்தை எழும் போது தடையாக இருப்பதாய் கூறுவது முட்டாள் தனம். ஆண், பெண் என்ற பேதமின்றி, இருவரும் பிரிவதற்காக கூறும் ஓர் காரணம் தான் இது.
15-1442302339-6freakyreasonsbehindthisgenerationsbreak-up

அக்கா, தங்கச்சி சென்டிமென்ட்
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, காதலிக்கும் வரை காதலித்துவிட்டு, திருமணம் என்று வரும் போது, நாம் செய்த தவறுக்கு அக்கா, தங்கை என்ன செய்வார்கள், அவர்களது வாழ்க்கையும் சேர்ந்து பாழாக்க வேண்டுமா? என்று கூறுவது. (நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து நாசாமா தான் போக போறீங்கன்னு தெரிஞ்சே, அப்பறம் எதுக்கு காதலிச்சீங்க….)
15-1442302347-7freakyreasonsbehindthisgenerationsbreak-up

எனது இலட்சியத்திற்கு தடையாக இருக்கிறது
இலட்சியம், குறிக்கோள் போன்றவைக்கு காதல் தடையாக இருக்கிறது என்று கூறுபவர்கள் உண்மையாக காதலிக்கவில்லை என்று தான் அர்த்தம். பிரிய வேண்டும் என்ற முடிவிற்கு காதலை தடை என்று கூறுவது தவறு.
15-1442302550-8freakyreasonsbehindthisgenerationsbreak-up