ஈரான் படத்துக்கு இசை அமைத்து பாராட்டு பெற்ற ஏ.ஆர்.ரகுமான்

ஈரான் படத்துக்கு இசை அமைத்து பாராட்டு பெற்ற ஏ.ஆர்.ரகுமான்

ஆஸ்கார் விருது பெற்று அசத்திய இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உலக அளவில் பிரபலமானவர் பல்வேறு மொழி படங்களுக்கு இசை அமைத்து முத்திரை பதித்து வருகிறார்.

சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஈரான் நாட்டு படம் ஒன்றுக்கு இசை அமைத்துள்ளார். இது அந்த நாட்டு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அவர் இசை அமைத்தற்காக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அந்த படத்தின் பெயர் ‘முகமத் தி மெசஞ்சர் ஆப் காட்’ இதை மஜீத்மகீதி என்ற டைரக்டர் இயக்கி இருக்கிறார். கடந்த மாதம் இந்த படம் ரிலீஸ் ஆனது. இது முகமது நபியின் வாழ்க்கையை ஆதாரமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்துக்கு இசை அமைக்க 200இசை கலைஞர்களை பயன்படுத்தி உள்ளார்.

ஈராக், ஜெர்மனி, பிரான்ஸ், எகிப்து, இந்தியா ஆகிய நாடுகளில் ரிக்கார்டிங் நடந்து இருக்கிறது. இறுதியில் இந்த படத்துக்கான இசை ‘மிக்சிங்’ சென்னையில் நடந்துள்ளது. இது பற்றி கூறிய ஏ.ஆர்.ரகுமான், ‘நான் இசை அமைத்த சிக்கலான இசை ஆல்பத்தில் இதுவும் ஒன்று. இஸ்லாம் மதம் அமைதி, மனிதாபிமானம் ஆகியவற்றை அதிகமாக போதிக்கிறது.

இந்த படத்துக்கு இசை அமைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். ஏ.ஆர்.ரகுமானுக்கு இப்போது ஈரானிலும் இசை ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.