விஜய் படத்தில் முழு காமெடியனான நான் கடவுள் ராஜேந்திரன்

விஜய் படத்தில் முழு காமெடியனான நான் கடவுள் ராஜேந்திரன்

‘நான் கடவுள்’ ராஜேந்திரன் இப்போது பெரும்பாலான படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ‘வில்லன்’ வேடத்தில் நடித்த இவர், கொஞ்சம் கொஞ்சமாக நகைச்சுவை பக்கம் பார்வையை திருப்பினார்.

இவரது நகைச்சுவைக்கு ரசிகர்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. இதனால் தொடர்ந்து ‘காமெடி’ ரோல்களில் நடித்து வருகிறார். மொட்டை தலையும், வித்தியாசமான நடிப்பும் நான் கடவுள் ராஜேந்திரனுக்கு ‘பிளஸ் பாயிண்ட்’ ஆக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இப்போது, அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் முழு காமெடி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வடிவேல் நடிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் நடிக்காததால் அந்த வேடத்தில் இவர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுதவிர அகமது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்திலும் அவருடன் சேர்ந்து ராஜேந்திரன் காமெடி வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியும் உண்டு. ‘டூயட்’ பாடும் காட்சியும் இடம் பெற்று இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இது நான்கடவுள் ராஜேந்திரனை வித்தியாசமான காமெடி நடிகராக காட்டும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.