நானும் ரௌடிதான் படத்தை பாராட்டிய கௌதம் மேனன்

நானும் ரௌடிதான் படத்தை பாராட்டிய கௌதம் மேனன்
விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளிவந்த படம் ‘நானும் ரௌடிதான்’. இப்படத்தை ‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். தனுஷ் தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோரின் நடிப்பை பார்த்து, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போதும், பார்த்திபன் சார் உங்களை போடணும் சார், இது மாதிரி வித்தியாசமான நெகட்டிவ் ரோல்களில் உங்களை எல்லோரும் போடணும் சார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, நயன்தாரா நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் ஒரு பவர் ஹவுஸ் என்றும், விஜய்சேதுபதி பெரிய ஹீரோவுக்கான படியில் ஏறிவிட்டார் என்றும், அத்துடன் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். ஒரு பெரிய இயக்குனரின் பாராட்டால் ‘நானும் ரௌடிதான்’ படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.