ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் அனிருத்

ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் அனிருத்

 தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் ‘ஆக்கோ’, தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம், தனுஷ் நடித்து வரும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இதில் தனுஷ் தயாரிக்கும் ‘நானும் ரவுடிதான்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் அனிருத் இசையில் படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது இவரது இசையில் அமைந்துள்ள ‘தங்கமே…’ எனத் தொடங்கும் பாடலை இன்று இரவு வெளியிட இருப்பதாக அனிருத் அறிவித்திருக்கிறார்.

இப்பாடல் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்றும் அனிருத் இசையில் வெளியான ஹிட் பாடல்கள் வரிசையில் இப்பாடல் இடம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.