மின்னல் தாக்கி நிலை குலைந்த விமானம் (Viral Video)

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்து கொண்டிருந்த கன்சாஸ் 438 என்ற விமானம் உயரழுத்தம் கொண்ட மின்னல் தாக்கியதால் நிலை குலைந்தது.

இந்த திடீர் தாக்குதலால் ரன்வேயில் தரையிறங்குவதற்கு உதவும் துல்லிய அணுகுமுறை பாதை காட்டி (Precision Approach Path Indicator) விமானிக்கு, தெரியாமல் போனது. எனவே விமானி, உடனடியாக தரையிறங்க முடியாமல் சிறிது நேரம் பறந்து கொண்டே இருந்தார். மணிக்கு 122 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்று கொஞ்சம் அடங்கிய பிறகே அவர் தரையிறங்கினார்.