மனைவிக்காக சுல்தான் டிக்கெட்டுகளை ஒட்டு மொத்தமாக வாங்கிய கணவர்

மனைவிக்காக சுல்தான் டிக்கெட்டுகளை ஒட்டு மொத்தமாக வாங்கிய கணவர்

சல்மான்கான் நடித்த ‘சுல்தான்’ படம் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை பார்க்க உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். முதல் இரண்டு நாட்களில் திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆகி ரூ.70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர் நகரில் உள்ள ஒரு திரையரங்கில் ‘சுல்தான்’ படம் வெளியானது. ஆனால் முதல் நாள் முதல் காட்சிக்கு இரண்டே இரண்டு பார்வையாளர்கள் மட்டுமே இருந்தார்களாம். அவர்கள் இரண்டு பேர்களும் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விசாரித்தபோது, அவர்கள் புதியதாக திருமணம் ஆன ஜோடி என்றும், மனைவிக்காக அந்த காட்சியின் அனைத்து டிக்கெட்டுக்களையும் கணவர் வாங்கிவிட்டார் என்றும் தெரியவந்தது. முதல் நாள் முதல் காட்சியின் அனைத்து டிக்கெட்டுக்களையும் அவரே வாங்கியதால் உறவினர்கள், நண்பர்களை அழைத்து வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அவர் தனது மனைவியை மட்டும் அழைத்து வந்ததை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தோம் என்று

The post மனைவிக்காக சுல்தான் டிக்கெட்டுகளை ஒட்டு மொத்தமாக வாங்கிய கணவர் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

மனைவிக்காக சுல்தான் டிக்கெட்டுகளை ஒட்டு மொத்தமாக வாங்கிய கணவர்