நடிகர் சங்க கட்டிட நிதிக்காக விஷால் – கார்த்தி நடிக்கும் புதிய படம்

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக விஷால் – கார்த்தி நடிக்கும் புதிய படம்

நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டுவதாக நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் வாக்குறுதி அளித்து பொறுப்புக்கு வந்தனர். அந்த இடத்தில் 5 மாடி கட்டிடம் கட்டப்படும் என்றும், அதில் 1,000 பேர் அமரும் அரங்கம், கல்யாண மண்டபம், பிரிவியூ தியேட்டர், கருத்தரங்க கூடம், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம், சங்க அலுவலகம் போன்றவை அமைக்கப்படும் என்றும் அறிவித்தனர். இதற்காக ரூ.29 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ரூ.9 கோடி நிதி திரட்டினார்கள். மீதி தொகையை பிரபல நடிகர்களை ஒரு புதிய படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க வைத்து அதன் மூலம் திரட்ட முடிவு செய்யப்பட்டது. தற்போது நடிகர் சங்கத்துக்கான படம் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இரண்டு படங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் படத்தில் விஷாலும்,

The post நடிகர் சங்க கட்டிட நிதிக்காக விஷால் – கார்த்தி நடிக்கும் புதிய படம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக விஷால் – கார்த்தி நடிக்கும் புதிய படம்