கிடாரி – திரை விமர்சனம்

கிடாரி – திரை விமர்சனம்

சாத்தூரில் ஆட்டுத் தொட்டி நடத்தி வரும் வேலராமமூர்த்தி, அந்த ஊரிலேயே பெரிய செல்வாக்குடன் திகழ்கிறார். ஆனால், ஊரை சுற்றிலும் பகை. அதனால், அவருக்கு பாதுகாப்பாக எப்பவும் கூடவே இருக்கிறார் சசிகுமார். அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மச்சானான ஓஏகே சுந்தர் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து என லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். இதை அறியும் சசிகுமார், ஓ.ஏ.கே.சுந்தரின் தொழிலுக்குள் மூக்கை நுழைக்கிறார். இதனால், ஓஏகே சுந்தருக்கும், சசிகுமாருக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. சசிகுமாரை தீர்த்துக்கட்ட ஓ.ஏ.கே.சுந்தர் முடிவெடுக்கிறார். இதற்கிடையில், வேலராமமூர்த்தியை மர்ம நபர்கள் யாரோ கத்தியால் குத்திவிடுகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவரை யார் குத்தினார்கள் என்பதை கண்டுபிடிக்க சசிகுமார் களமிறங்குகிறார். இறுதியில், சசிகுமார் தனது முயற்சியில் வென்றாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. கிடாரி கதாபாத்திரத்திற்கு சசிகுமார் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கிராமத்து கதைகளில் நடிக்க சசிகுமாருக்கு சொல்லித்தர தேவையில்லை. அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருப்பது சிறப்பு. காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் தேறவேண்டும்.

The post கிடாரி – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
கிடாரி – திரை விமர்சனம்