என் உடல் நிலை பற்றி பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்: கே.ஆர்.விஜயா

என் உடல் நிலை பற்றி பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்: கே.ஆர்.விஜயா

தமிழ் பட உலகில் 1960, 70 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கே.ஆர்.விஜயா. மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். கே.ஆர்.விஜயாவுக்கு தற்போது 70 வயது ஆகிறது. இவரது கணவர் வேலாயுதன் நாயர் கடந்த வருடம் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு பிறகு கே.ஆர்.விஜயா கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவருடைய உடல் நிலை பற்றி நேற்று திடீர் வதந்தி பரவியது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் ஏராளமானோர் தொலைபேசியில் அவரது உடல் நிலை குறித்து விசாரித்த வண்ணம் இருந்தார்கள். பின்னர் அது வதந்தி என்று தெரிய வந்தது. இதுபற்றி கே.ஆர்.விஜயாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:- “என் காலில் சுளுக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் நடப்பதற்கு சிரமப்படுகிறேன். ஆலப்புழையில் உள்ள வீட்டில் தற்போது ஓய்வு எடுத்து வருகிறேன். நடிகை ராதிகா மகள் திருமணத்துக்கு சென்னை வரலாம்

The post என் உடல் நிலை பற்றி பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்: கே.ஆர்.விஜயா appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Click Watch and Download
என் உடல் நிலை பற்றி பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்: கே.ஆர்.விஜயா