ஸ்மார்ட்போன்களின் வருகையால் நாம் தொலைத்தவை

ஒரு விடயம் இல்லவே இல்லை, அதனால் அதை யாராலும் பயன்படுத்தவில்லை என்றால் அது அழிந்து விட்டது என்று அர்த்தம். ஒரு விடயம் இருக்கிறது, இருப்பினும் அதை யாரும் பயன்படுத்தவில்லை என்றால் – அது தொலைந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

அப்படியாக ஒரு காலத்தில் நம்மால் பெருமளவு பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட 12 பொருட்கள் தற்போது துளி அளவு கூட பயன்படுத்தபடவில்லை. ஆனால் அந்த 13 பொருட்களுக்கு மாற்றாக நாம் ஒரே ஒரு பொருளை பயன்படுத்துகிறோம் – அது தான் ஸ்மார்ட்போன்.!

ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு பின் நாம் தொலைத்த சில பொருட்களைத்தான் கீழே தொகுத்துள்ளோம்!

லேன்ட்லைன்கள்
மொபைல் பரவலான காலத்திலேயே காணாமல் போய் விட்டன. ஸ்மார்ட்போன் காலத்தில் சொல்லவே வேண்டாம்.
24-1448357518-2

ஜிபிஎஸ் கருவி
ஸ்மார்ட்போன்களில் ஜிபிஎஸ் மிகவும் எளிமையாக்கப்பட்டு விட, ஜிபிஎஸ் பயன்பாட்டிற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கருவிகள் காணாமல் போய்விட்டன.
24-1448357516-1

பே-போன்கள்
ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசக்கூடிய போன்களை தற்போது காண்பதே அரிதாகி விட்டது.
24-1448357526-4

அலார கடிகாரங்கள்
நம் ஸ்மார்ட்போன்கள் தான், தற்கால பிரதான அலாரம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
24-1448357537-8

வாய்ஸ் ரெக்கார்டர்ஸ்
குரல் பதிவுகளையும் ஸ்மார்ட்போன்கள் எளிமையான முறையில் நிகழ்த்துவதால் வாய்ஸ் ரெக்கார்டர்கள் காணாமல் போயின.
24-1448357540-9

டிஜிட்டல் மியூசிக் ப்ளேயர்கள்
ஆப்பிள் இன்றுவரை ஐபாட்களை உருவாக்கினாலும் கூட, இசை கேட்க ஸ்மார்ட்போன்கள் தான் பெரிதளவும் பயன்படுத்தப்படுகின்றன.
24-1448357543-10

கல்குலேட்டர்கள்
ஒரு பட்டனை தட்டினால் போதும் ஸ்மார்ட் போனில் கால்குலேட்டர் வந்து விடும்!
24-1448357548-11

மேப்கள்
கூகுள் மேப்பின் வருகைக்கு பின் ‘மேப்’ புகைப்படங்களை அரிதாக எங்காவது தான் காண முடிகிறது.
24-1448357552-12

டிவிக்கள்
நிஜம்தான் டிவியும் தொலைக்கிறது, 3 மணி நேர திரைப்படங்களை கூட நம்மவர்கள் ஸ்மார்ட்போனில் தான் பார்க்கிறார்கள்.
24-1448357555-13

ஸ்கேனர்கள்
பிடிஎஃப் (PDF) ஃபைல் களை பரிமாறிக் கொள்ள ஸ்மாரேட்போன்கள் வழி வகுத்த பின் ஸ்கேனர்கள் காணாமல் போயின.
24-1448357529-5

கேமிராக்கள்
குறைந்த பட்சம் 0.3 எம்பி என தொடங்கி, அதிக பட்சமாக 42 எம்பி கேமிரா வரை ஸ்மார்ட் போன்களில் இருக்கும் போது, தனியாக ஒரு கேமிரா தேவைப்படுவதில்லை.
24-1448357531-6

வீடியோ கேமிராக்கள்
புகைப்பட கேமிராவை போலவே தான் வீடியோ கேமிராவும் அதிக பயன்பாடு இன்றி காணாமல் போய்க் கொண்டே இருக்கிறது.
24-1448357534-7