தொடர்ந்து விஜய்யுடன் மோதும் விஷால்

தொடர்ந்து விஜய்யுடன் மோதும் விஷால்

விஜய்க்கும் விஷாலுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்துகொண்டே வருகிறது. இந்த மோதல் நேரடியாக அல்ல, தொழில்ரீதியாக நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே, விஜய் நடிப்பில் வெளிவந்த ‘கத்தி’ படம் வெளியான போது, விஷால், தன்னுடைய நடிப்பில் வெளிவந்த ‘பூஜை’ படத்தையும் அதற்கு எதிராக களமிறக்கி விட்டார்.

அதேபோல், விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் ‘புலி’ படத்திற்கு எதிராக தனது ‘பாயும் புலி’ படத்தையும் விஷால் களமிறக்க முடிவு செய்துள்ளார்.

முன்பெல்லாம் படம் ரீலீசுக்கு மட்டுமே விஜய்யுடன் நேரடியாக மோதிய விஷால், தற்போது ஆடியோ வெளியீட்டிற்கும் நேரடியாக மோத தயாராகிவிட்டார். ஆம், விஜய்யின் ‘புலி’ படத்தின் ஆடியோவை ஆகஸ்ட் 2-ந் தேதி வெளியிடப்போவதாக முன்னதாகவே அறிவித்திருந்தனர்.

தற்போது, விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் புலி’ ஆடியோவையும் ‘புலி’ படத்தின் ஆடியோ வெளியாகும் ஆகஸ்ட் 2-ந் தேதியே வெளியிட விஷால் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஆகவே, மீண்டும் புலிக்கும், பாயும் புலிக்கும் போட்டி நிலவியுள்ளது. இதில் எந்த புலி ஜெயிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.