கேரள ரசிகர்களுக்கு விஜயின் ஸ்பெஷல் ஓணம் விருந்து

சென்னை: தமிழ்நாட்டில் எப்படி நாம் தீபாவளியைக் கொண்டாடுகிறோமோ அதே போன்று கேரளாவில் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக ஓணம் திகழ்கின்றது. இந்த ஓணம் பண்டிகைக்கு கேரளாவின் முன்னணி டிவி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தயாராகி வருகின்றன. இதில் கேரளாவின் முன்னணி டிவி சேனலான சூர்யா நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்பவிருக்கின்றது.

விஜயின் மலையாள ரசிகர்கள் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக கேரளாவில் விஜய்க்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் நடித்த துப்பாக்கி, ஜில்லா மற்றும் கத்தி போன்ற திரைப்படங்கள் கேரளாவில் நல்ல வசூலை ஈட்டியதில், மலையாள உலகிலும் விஜயின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.