லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் கொடுத்த விஜய்

லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் கொடுத்த விஜய்

விஜய்யும், லாரன்ஸும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவார்கள். மேலும் பல மேடைகளில் லாரன்ஸ் விஜய்யை பற்றி பல விஷயங்களை தெரிவித்து புகழ்ந்திருக்கிறார்.

விஜய் நடித்த ‘புலி’ படம் சமீபத்தில் வெளியானது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் லாரன்ஸ் தன்னுடைய அறக்கட்டளையில் படிக்கும் குழந்தைகளுக்கு ‘புலி’ படத்தை பார்க்க ஏற்பாடு செய்திருந்தார். குழந்தைகளும் படத்தை பார்த்து சந்தோஷமடைந்தார்கள்.

இந்நிலையில் விஜய் குடிசைப்பகுதிகளில் வாழும் குழந்தைகள் உயர்தரமான பள்ளியில் படிப்பதற்காக ஐந்து லட்சம் ரூபாயை லாரன்ஸ் டிரஸ்ட்டுக்கு வழங்கியிருக்கிறார். இதேபோல் நடிகர்கள் ஜெய், விஜய் சேதுபதி, சிம்பு, நடிகைகள் தமன்னா, டாப்ஸி ஆகியோரும் உதவி செய்திருக்கிறார்கள். இவர்கள் மூலம் தனது கனவு நினைவாக உள்ளதாக கூறிய லாரன்ஸ், அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.