காந்தி ஜெயந்தியன்று வெளியாகும் விஜய் சேதுபதி படம்

காந்தி ஜெயந்தியன்று வெளியாகும் விஜய் சேதுபதி படம்

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. இப்படத்தை விஜய் சேதுபதியே தயாரித்திருந்தார். தந்தை மகனுக்கு இடையேயான உறவை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் உருவாகியிருந்தது. தற்போது இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் அடுத்த படமான ‘நானும் ரவுடிதான்’ காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராதிகா, பார்த்திபன், பாலாஜி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிட இருக்கின்றனர்.