புலி படத்தில் விஜய் புது கெட்டப் |Tiger, Vijay new role

விஜய்யின் 58-வது படமாக உருவாகி வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிவடைந்துவிட்டது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார்.

பேண்டசி படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய், இளவரசன் கதாபாத்திரத்தில் நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் சென்னைக்கு அருகே ஈசிஆர் சாலையில் பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கினர்.

இதையடுத்து, ஆந்திரா அருகே தலக்கோணம் பகுதியில் அரசர் காலத்தில் உள்ள வீடுகள் போன்று செட் போட்டு படமாக்கி வருகின்றனர். தற்போது, இந்த படத்தில் விஜய், அபூர்வ சகோதரர்கள் குள்ள கமல்ஹாசனைப் போன்று ஒரு கெட்டப்பில் வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

3 அடி உயரமுள்ள மனிதனாக இவர் வரும் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்களாம். இதற்காக அதிநவீன கேமராக்களை உபயோகித்து வருகிறார்களாம். இந்த கெட்டப்பில் விஜய்க்கு ஒரு பாடல் காட்சி வேறு இருக்கிறதாம்.

இந்த கெட்டப் ரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று புலி படக்குழுவினருக்கு எச்சரிக்கை விட்டிருந்தார்களாம். இருப்பினும், இந்த ரகசியம் வெளிவந்துள்ளது படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், விஜய்யின் இந்த கெட்டப்பை ரசிகர்கள் எந்தளவுக்கு ரசிப்பார்கள் என்ற ஆவலும் எழுந்துள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி கபூர், சுதீப், பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *