அருள்நிதியின் அட்டகாசம் மே மாதமே வருகிறது

அருள்நிதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘டிமான்ட்டி காலனி’. இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றிய அஜய் ஞானமுத்து என்பவர் இயக்கியிருக்கிறார்.

ஆக்ஷன், திரில், சஸ்பென்ஸ், காமெடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்? என்பதை படக்குழுவினர் இன்னமும் சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், அபிஷேக், மதுமிதா, ஆர்.ஜெ.திலக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

19-ஆம் நூற்றாண்டில் சென்னையில் ஆழ்வார்பேட்டையில் நடந்த திகில் சம்பவங்களை தொகுத்து, திருப்பங்கள் நிறைந்த படமாக உருவாகியிருக்கிறார்கள். இதற்காக சென்ற நூற்றாண்டில் பட்டிணப்பாக்கம், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை முதலான இடங்களை தத்ரூபமாக அரங்கம் அமைத்து படமாக்கி உள்ளனர்.

இப்படத்தை மோகனா மூவிஸ் சார்பாக மு.க.தமிழரசு, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *