சிம்புவுடன் முதன்முதலாக கைகோர்க்கும் தமன்னா?

சிம்புவுடன் முதன்முதலாக கைகோர்க்கும் தமன்னா?

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வாலு படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘கான்’ என்ற படத்திலும், கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படமும் பாதியிலேயே நிற்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் அமீர் இயக்கும் புதிய படத்திலும் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பல முன்னணி நடிகைகளை தேடி வந்த நிலையில், தற்போது தமன்னாவை இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ செய்தி இல்லையென்றாலும், கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் தமன்னா நடிப்பது உறுதியாகிவிட்டால், சிம்புவும், தமன்னாவும் இணையும் முதல் படம் இதுவாகும். இப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகவிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து பின்னணியில் உருவாகும் ஒரு படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.