சூர்யா படத்தில் கர்ப்பிணியாக நடிக்கும் வித்யா பிரதீப்

சூர்யா படத்தில் கர்ப்பிணியாக நடிக்கும் வித்யா பிரதீப்

‘அதிபர்’ படத்தில் ஜீவனுக்கு ஜோடியாக நடித்தவர் வித்யா பிரதீப். தற்போது ‘அசுரகுலம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘பசங்க-2’ படத்திலும் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, நான் சூர்யாவை முதன்முதலாக ‘பசங்க-2’ செட்டில் பார்த்ததும் எனக்கு ரொம்பவும் ஆச்சர்யமாக இருந்தது. அவருடன் நடிக்கவேண்டும் என்ற என்னுடைய நீண்டநாள் கனவு இந்த படத்தின் மூலம் நிறைவேறி விட்டது என்றார்.

மேலும் அவர் கூறும்போது, ‘பசங்க-2’ மூன்று குடும்பங்கள் சம்பந்தப்பட்ட கதை. ஒன்று சூர்யாவின் குடும்பம், இன்னொன்று பிந்துமாதவியின் குடும்பம். மற்றொரு குடும்பம் என்னுடையது. இப்படத்தில் நான் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறேன் என்று கூறினார்.

‘பசங்க-2’ படத்தில் சூர்யாவுடன் அமலாபால், பிந்துமாதவி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சூர்யா தனது சொந்த நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். ஆரோல் கொரெல்லி இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை வருகிற அக்டோபர் 17-ந் தேதி வெளியிடவுள்ளனர்.